பஸ் சாரதி மீது சிறுநீர் தாக்குதல்: பயணிகளும் சிறுநீரில் குளித்தனர்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் திவுலபிட்டிய டிப்போவிற்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் மீது மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்திய போது குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் சாரதி ஒருவர் சிறுநீர் வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்தின் சாரதி போத்தலில் சிறுநீரை எடுத்துச் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், பஸ்சில் இருந்த பயணிகளும் சிறுநீரால் நனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இரு சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு காரணமாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...