இதய அறுவை சிகிச்சைக்காக 2500 குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில்!

Date:

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய 2500 சிறுவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஜி. விஜேசூரிய குறிப்பிடுகிறார்.

இதய நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படும் குறைந்தது 5 குழந்தைகளாவது ஒவ்வொரு நாளும் இதய நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 5 குழந்தைகளுக்கு மாத்திரமே இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர், சத்திரசிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக லிட்டில் ஹார்ட் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட 11 மாடிக் கட்டிடப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இப்பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டாலும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அடுத்த ஆண்டு இறுதி வரை கட்டுமானப் பணிகள் தாமதமாகலாம், எனவே இதனை முடிக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

நாட்டின் குழந்தைகளின் நலன் கருதி இதற்கு பங்களிக்க முன்வரவேண்டும் என நன்கொடையாளர்களிடம் லிட்டில் ஹார்ட் ஃபண்ட் கேட்டுக்கொள்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...