இலங்கையில் 13ஐ அமுல்படுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

Date:

இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார்.

இந்நிலையிலேயே கே.எஸ்.அழகிரி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இவ்வாண்டுடன் 36 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

தற்போது வரையில் அதிலுள்ள பல்வேறு முக்கிய விடயங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சதிப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் 13இல் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதனை தமிழ் கட்சிகள் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...