சமூக நலனுக்காகவே வாழ்ந்த அல்ஹாஜ் அஷ்ரப் ஹுஸைன்!

Date:

மற்றவர்களுக்கு உதவுவதனை பெரும் நிறைவாகக் கண்ட அஷ்ரப் ஹுஸைனின் வாழ்வு முன்மாதிரிமிக்கது. அவர் மறைந்து கடந்த 16 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறது

அஷ்ரப் ஹுஸைன்பல சமூகப்பணிகளை மேற் கொண்டு வாழ்ந்த உதாரண புருஷராவார். அவரின் எண்ணங்களும் சித்தனைகளும் சமூக நலன் சார்ந்ததாக இருந்தன. பிறரை வாழவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்.

தானதர்மம் செய்வதில் அவர் சிறந்தவர். அவர் மட்டுமல்ல அவருடைய குடும்பமும் அந்தப்பணியை செய்கிறது. மர்ஹும் அஷ்ரப் ஹுஸைன் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளை செய்தார். கஷ்டப்பட்ட மக் களின் துயர் துடைப்பதில் பெருமனங் கொண்டவர்.

கொழும்பு மாவட்டத்தில் பேரும் புகழுமாக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த அஷ்ரப் ஹுஸைன் மக்கள் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரவைத் நாக்கத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவிகள் வழங்கியிருந்தார்.

ரமழான் காலங்களின் பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகள் அமர்களில் மக்கள் ஈடுபடும் வகையில் மின்சாரம், நீர், உணவுப் பொருட்கள், போக்குவரத்து வசதி களை செய்து கொடுத்தார்.

ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் அவ குடைய நண்பர்களை அழைத்து இப்தார் ஏற்பாடு செய்தார்.

ஏழை எளிய மக்களுக்கு தானதர்மம் அன்பளிப்புக்களை வழங்கும் பண்புள்ளவராக வாழ்ந்தார். மாணவர்களின் கல்வி பயர் கல்வி மற்றும் விளையாட்டு விவகாரங்களிலும் ஊக்கப்படுத்தினார்.

முர்ஹும் அஷ்ரப் ஹுஐஸன் மரணித்தாலும் அவர் செய்த நற்பணிகளால் உயிர்வாழ்கிறார். அவர் கொழும்பில் மில்லத் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்தார்.

ஊடகவியலாளர்களுடன் அகிக நேசம் வைத்திருந்தார். பல்வேறு அமைப்புக ளுக்கு பங்களிப்பு வழங்கினார்.

சமூகத்தில் கவனிக்கப்படாதுள்ள பிரிவினருக்கு உதவுவதில் இவர் விசேட அக்கறை காட்டினார். நீதி நியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக போராடுவதில் முன்னி லையில் இருந்தார்.

 

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...