நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள்!

Date:

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றவையாகும்.

1960 என்ற இலக்கத்தின் ஊடாக 9,774 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகும்.

இதுவரை சுமார் 1800 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக அதிகாரத்தை பிரயோகித்தமை, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை காணத் தவறியமை, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்தமை ஆகியன இந்த முறைப்பாடுகளில் பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் தவறுகள் தொடர்பிலான எந்தவொரு விடயம் குறித்து பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய முடியும்.

சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கும்.

1960 தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...