புத்தளம் தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!

Date:

புத்தளம் மதுருகம பகுதியில் தும்புத் தொழிற்சாலை அதனை அண்டிய காட்டுப் பகுதியில் பாரியளவில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினால் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் ஒன்றும் தீக்கரையாகியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான தேங்காய் மட்டைகள், தேங்காய் தும்பு ஆகியன தீக்கரையுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து தீப்பரவிய இடத்திற்கு நகரசபையின் தீயனைக்கும் படையினரும் தம்பபண்ணி கடற்படைத் தீயனைப்புப் படையினரும் கிராம மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ இன்ஸி சிமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் இனந்தெரியாத எவராலும் தீ வைக்கப்பட்டுள்ளமையினால் குறித்த தீ காற்றில் பரவி தும்புத் தொழிற்சாலையில் தீ ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...