விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை: சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு !

Date:

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் சுமார் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தற்போது ஓய்வு பெற்றுள்ள விசேட வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த முடியுமாக என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...