இன்று கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு!

Date:

கொழும்பின் பல இடங்களில் இன்று (15) 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி முதல் இரவு 10 வரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 04 வரையிலான பகுதிகளிலும், கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலும் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர் வளாகங்களுக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...