இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்த மீண்டும் யோசனை!

Date:

ஜப்பானின் நிதியுதவியுடன் இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மீண்டும் முன்மொழியப்பட்ட இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...