இலங்கையில் தயாரிக்கப்படும் Aspirin மருந்து பாவனையிலிருந்து நீக்கம்!

Date:

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அஸ்பிரின்(Aspirin) மாத்திரை தொகுதியொன்று தற்காலிகமாக பாவனையிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்தின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாத்திரை தொகுதி பாவனையிலிருந்து நீக்கப்பட்டாலும், அஸ்பிரின் மாத்திரைக்கு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது என வைத்தியர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...