இலங்கையில் பிறந்த பிபிசி செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்!

Date:

இலங்கையில் பிறந்த பிபிசியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.

பிபிசியின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான அவர், இரண்டு தசாப்தங்களாக பிபிசி செய்தியை தயாரித்து வழங்கியதுடன், வெளிநாட்டு நிருபராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பிறந்நத ஜோர்ஜ் அழகையா கானாவிற்கு குடிபெயர்ந்த பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் பிபிசியில் பணியாற்றியுள்ளார்.

சோமாலியா, ஈராக், ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக ஜோர்ஜ் அழகையா விருதுகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...