“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்”: உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி

Date:

 உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.

இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,

“உக்ரைனின் எதிர்காலம் நேட்டோ அணிக்குள்தான் உள்ளது. அணியில் உள்ள நாடுகள் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, அது நிறைவேற்றப்படும்போது உக்ரைனை அணியில் சேருவதற்கான அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்மாதிரியான நிபந்தனை என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் “நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கு சீனா ஒரு சவாலாக உள்ளது. ரஷ்யாவும், சீனாவும் சர்வதே ஒழுங்கை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. உக்ரைனில் அமைதியை விரும்புவதாக சீனா கூறியுள்ளது. ஆனால், பிப்ரவரி 2022-இல் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பை சீனா இதுவரை கண்டிக்கவில்லை.

எங்கள் அணியில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள பின்லாந்தை நாங்கள் வரவேற்கிறோம். இது பின்லாந்துக்கும், நேட்டோவுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

பல ஆண்டுகளாக, நாம் நட்பு நாடுகளாக நெருக்கமாக பணியாற்றினோம். ஆனால், இப்போது நெருங்கிய நட்பு நாடாக மாறி இருக்கிறோம். இந்த இணைவு பின்லாந்தை பாதுகாப்பானதாகவும், நேட்டோவை வலுவானதாகவும் மாற்றி இருக்கிறது.

உக்ரைன் மீது நியாயமற்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு ரஷ்யா முழுப் பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யா சர்வதேச வீதிகளை மீறுவதை கடுமையாக கண்டிக்கிறோம்” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...