உலகின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் தொடர்பான தகவலை World Of Statistics அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி உலகின் மிக மோசமான போக்குவரத்து உள்ள நகரங்கள் பட்டியலில் நைஜீரியாவில் உள்ள நகரான லாகோஸ் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாமிடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், மூன்றாம் இடத்தில் சான் ஜோஸ் நகரமும் உள்ளன.
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு நான்காவது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் டெல்லி நகரம் உள்ளது.