உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை: அலி சப்ரி

Date:

உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய ரூபாவை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்திய ரூபாவின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மை இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் .

எனவே உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது வர்த்தக ரீதியில் இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்தக் கடன் 83 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது, இதில் 41.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு மற்றும் 42.1 பில்லியன் டொலர் உள்நாட்டு கடன். இலங்கை தற்போது தனது கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...