கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் பயணிகள் போக்குவரத்து சேவை!

Date:

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையான பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தியிருந்த பேருந்து சேவை, இரண்டு நாட்களுக்கு முன்னர் விமான நிலைய வளாகத்திற்குள் பேருந்துகள் நுழைய ஆரம்பித்தது.

இரு தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், பேருந்து சாரதிகளை அழைத்து விமான நிலைய தலைவர் அனுமதி வழங்கியதன் பேரில் பேருந்து பயணத்தை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் இன்று பொலிஸார் பேருந்துகளை அகற்றுமாறு தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் எவரிவத்தை பேருந்து நிலையத்திற்கு மட்டும் பேருந்துகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை முச்சக்கர வண்டி சாரதிகள் சந்தித்த பின்னர், விமான நிலையத்தைச் சுற்றி இருந்த பேருந்துகளை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...