துபாய் கிழக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான வார்சனில் 4 பில்லியன் திர்ஹம் செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கழிவு ஆற்றல் மையத்திற்கான (Waste to Energy Centre) முதல் கட்டடத்தை கடந்த செவ்வாயன்று துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் திறந்து வைத்தார்.
இந்த புதிய மையத்தின் ஊடாக ஆண்டுக்கு 2 மில்லியன் தொன் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் இல்லாமல் மின்சாரமாக செயலாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய மையம் சுமார் 135,000 வீடுகளுக்கு யூனிட்டுகளுக்கு மின்சாரத்தை வழங்கும் அளவிற்கு, 220 மெகாவாட் மணிநேர புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டது.
இவ்விடயம் தொடர்பில் ஷேக் ஹம்தான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இத்தகைய தனித்துவமான திட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” என பதிவிடப்பட்டிருந்தது.
பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த ஆற்றல் உற்பத்தி ஆலையில் ஐந்து லைன்களில் இரண்டு செயற்படத் தொடங்கியுள்ளன.
அதன்மூலம் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 2,300 டன் திடக்கழிவுகளை செயலாக்கிஇ சுமார் 80 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.
அடுத்த இராண்டாம் கட்டத் திறப்பின்போது அதன் ஆற்றல் உற்பத்தியானது 220 மெகாவாட்டாக விரிவடையும்.
இதேவேளை இந்த திட்டத்தின் ஊடாக நிலப்பரப்பில் இருந்து கழிவுகளை திசை திருப்புவதன் மூலம் ஆண்டுதோறும் 2,400 டன் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படும் என்றும், இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏறத்தாழ 3 மில்லியன் மக்களால் உற்பத்தி செய்யப்படும் தினசரி கழிவுகளை இந்த வசதியின் மூலம் ஆற்றலாக மாற்றலாம்.
அத்துடன் மையத்தின் மின்சாரம் உருவாக்கும் டர்பைன்களுக்குத் தேவையான நீராவியை உற்பத்தி செய்ய மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை இந்த மையம் பயன்படுத்துகிறது.
எனவே இந்த முயற்சி முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதகமில்லாத தொழில்நுட்பம் ஆகும்.
குறிப்பாக, எமிரேட்டின் வளர்ச்சியை உலகளாவிய முன்மாதிரியாக உயர்த்த 2021இல் இந்த முக்கியத் திட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
இந்த முழு திட்டமும் 2024 இற்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
I inaugurated the world’s largest and most efficient waste-to-energy facility in Warsan featuring an investment of AED 4 billion, a remarkable project that reinforces Dubai’s status as a global leader in sustainable infrastructure. The facility is capable of generating 220… pic.twitter.com/DqraruoC0C
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) July 4, 2023