குர்ஆன் எரிப்பு எதிரொலி: சுவீடன் தூதரை வெளியேற்றியது ஈராக்: தூதரகம் மீதும் தாக்குதல்

Date:

ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர்.

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன் எரிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்று ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இந்த நிலையில் சுவீடன் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...