2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறைப்பரீட்சை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சங்கீதம், நடனம் மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப்பரீட்சை இவ்வாறு நடைபெறவுள்ளது.
இதன்படி பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.