ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள Threads!

Date:

ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு மாற்றாக Meta-வின் Threads தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Threads தளம் ஆரம்பிக்கப்பட்ட 7 மணித்தியாலங்களில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.

இந்த ட்விட்டர் தளத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ள அதன் பயனர்கள்  Threads-இல் இணைவார்கள் என கருதப்படுகிறது.

Meta-வின் Instagram தளத்தை அடிப்படையாக வைத்து Threads இயங்குகிறது.

Instagram தளத்தில் ஏற்கனவே Verify செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் Blue Tick வழங்கப்படுகிறது.

அண்ட்ராய்ட் மற்றும் அப்பிள் போன் பயனர்கள் நேரடியாக App Store-இல் இருந்து  Threads செயலியை தரவிறக்கம் செய்யலாம்.

அதன் பின்னர் பயனர்கள் தங்கள்  Instagram கணக்கு விபரங்கள் மூலமாக Login செய்யலாம்.

500 எழுத்துக்கள் எனும் எண்ணிக்கையில் பயனர்கள் தமது பதிவுகளை  Threads-இல் மேற்கொள்ள முடியும்.

இணைப்புகள் (Links), ஔிப்படங்கள்,  5 நிமிட வீடியோக்களையும் பதிவிட முடியும். பதிவு ஒன்றில் 10 படங்களை உள்ளடக்க முடியும்.

ட்விட்டரை போலவே பதிவை மீண்டும் Repost செய்யவும், Quote செய்யவும் முடியும்.

பதிவை லைக் செய்யவும், Instagram-இல் பகிரவும் முடியும்.

பயனர்கள் இதில் Stories-ஐ இப்போதைக்கு பகிர முடியாது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...