நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி சிறைபிடிப்பு!

Date:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி முகமது பாசுமை சிறைபிடித்தனர்.

இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குறித்த இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...