பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் 70 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றி கொண்டு சென்றதால் படகு தள்ளாடியபடி சென்றது. அப்போது பலத்த காற்று காரணமாக பயணிகள் படகின் ஒரு பக்கமாக நின்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது.
இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 40 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறார்கள்.