புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை!

Date:

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ரயில் சேவைகளை ஆய்வு செய்யவுள்ள இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து பின்னர் அந்த குழு தேவையான பரிந்துரைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...