புத்தளத்திற்கு பெருமை தேடி தந்த உலகக்கிண்ண வீரர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

Date:

உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய வீரர்களை  வரவேற்கும் நிகழ்வும் வீதி ஊர்வலமும் மாலை 4.00 மணி – 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.

Kumpulan De Malayu Puttalam மற்றும் Malay Sports Club இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...