இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இன்றைய தினம் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பல முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.