யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடருவதால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து அகதிகளாகத் தொடர்ந்து தனுஷ்கோடி சென்ற வண்ணம் உள்ள நிலையில், இன்று சனிக்கிழமை காலை தனுஷ்கோடிக்கு 8 பேர் அகதிகளாக சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும பொலிஸ் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற பொலிஸார் குறித்த 8 பேரையும் பாதுகாப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அகதிகள் முகாமில் உள்ள அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...