வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் போது புதிய பொலிஸ்மா அதிபர்குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பொலிஸ் துறை தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு மட்டுமே பதில் கடமையாற்ற நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், பொலிஸ்மாமா அதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் பல ஊடகங்களில் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவையை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும்,பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடலின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.