மத்திய மாகாணம், வட்டதெனிய ரம்மியமான சூழலில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்துறை தேர்ச்சி மிக்க சீரான இஸ்லாமிய பெண் ஆளுமைகளை உருவாக்குதலை நோக்காகக் கொண்ட இக் கல்லூரியில் விசேட பாடநெறிகளாக:
• இஸ்லாமிய கற்கைகளுக்கான அல் ஆலிமா (4 வருடங்கள்).
• க.பொ.த உயர்தர கலைப்பிரிவு (அரபு, இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், புவியியல், (ICT).
• அல் குர்ஆன், ஆசிரியை பயிற்சிப் பாடநெறி.
• அரசாங்க அல் ஆலிம் சான்றிதழ் பரீட்சை (தயார்படுத்தல்).
• தொழில் பயிற்சிப் பாடநெறிகள்.
இவற்றுடன்:
• தேசிய சர்வதேச மொழித் தேர்ச்சிப் பாடநெறிகள் (அரபு, ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழில்நுட்பம் (IT),
• திறன் விருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி வழிகாட்டல்கள் அமையப் பெற்றுள்ளன.
தகைமைகள்:
•தேக ஆரோக்கியமும் நல்லொழுக்கமும் மிக்க பெண்ணாக இருத்தல்,
•அல்குர் ஆனை சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்,
•2021இற்கான க.பொ. த சாதாரண பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்.
நேர்முகப் பரீட்சையில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக:
• தேசிய அடையாள அட்டை.
• தரம் 10 மற்றும் 22 இற்கான தேர்ச்சி அறிக்கை.
• 2021இன் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய அனுமதி அட்டையின் பிரதி.
• ஏனைய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப முடிவுத்திகதி 15.07.2023. விண்ணப்பங்களை இணைய வழியூடாகவே அனுப்பவேண்டும். நேர்முகப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு 0812055050, 0742192009, 0772434586, 0772223930 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்ப லிங்கை பெறுவதற்கு KKLC Application link என Type செய்து 0751883137 இற்கு வாட்ஸ்அப் செய்து பெற்றுக் கொள்ளலாம்.