முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய புத்தாண்டு (முஹர்ரம்) கொண்டாட்டம் தொடர்பான சமய நிகழ்வுகள் கொழும்பு வெள்ளவத்தை மஸ்ஜித் அல் மக்பூல் (மேமன் ஹனபி மஸ்ஜித்) பள்ளிவாசலில் கடந்த 20ம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் மஸ்ஜித் அல் மக்பூல் நம்பிக்கையாளர் ஹாபிஸ் இஹ்சான் இக்பால் காதிரி அவர்கள் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் சிறப்புகள் குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றினார்.

அத்துடன் ஹாபிஸ் தமீம் பட்டேல் மற்றும் ஹாபிஸ் ஃபுர்கான் மயாரி ஆகியோர் கஸீதா இசைத்தனர்.

இலங்கை வக்பு நியாய சபை உறுப்பினர் ஏ.ஏ.எம். இல்யாஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களினால் கௌரவ அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், இலங்கை வக்ப் சபையின் தலைவர் மொஹிதீன் ஹுசைன், ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் அன்சார், கொழும்பு முன்னாள் பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால், வக்பு சபை உறுப்பினர் முப்தி முஸ்தபா ரஸா காதிரி மிஸ்பாஹி மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.