கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் ஆரம்பமானது: டயானா கமகே

Date:

கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில் கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை வலயத்துள் மேற்படி கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திட்டத்தால் இரண்டு மூன்று வருடங்களில் 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் கடந்த கால முயற்சியை தோற்கடித்தது போன்று இந்த செயற்றிட்டத்தை தோற்கடிக்க முடியாது. அதற்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...