சப்ரகமுவ ஆசிரியர்கள் மேலதிக தனியார் வகுப்புக்கள் நடத்த தடை!

Date:

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் தமது வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களை, தாம் நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களில் இணைத்துக் கொள்ள ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தை அவ்வாறே அமுல்படுத்துமாறு மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தமது பாட விடயதானங்களை மேலதிக வகுப்புக்களின் ஊடாக மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கே சப்ரகமுவ மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார்.

பாடசாலைகளில் கற்பிக்கும் விடயதானங்களை அதே ஆசிரியர், பணத்தை பெற்றுக்கொண்டு நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கு, இதற்கு முன்னர் இருவேறு சந்தர்ப்பகளில் சுற்று நிரூபங்களின் ஊடாக தடை விதிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...