சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் செப்டெம்பரில் கிடைக்கும்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விரைவான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதால் எதிர்வரும் செப்டெம்பரில் இரண்டாம் கட்ட கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”சர்வதேச நாயண நிதியத்தின் முதல் தவணை கடன் மாத்திரமே இலங்கைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.

அடுத்தகட்ட தவணை கடன்களை பெற்றுக்கொள்ள பல நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. என்றாலும், அவர்கள் வழங்கியுள்ள பல்வேறு நிபந்தனைகளை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

வரி மறுசீரமைப்பு என்பது இதில் பிரதானமான ஒன்றாகும். வரி மறுசீரமைப்பின் ஊடாக அரச வருவாய் அதிகரித்துள்ளதுடன், நட்டமீட்டும் பல்வேறு அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கியுள்ளோம்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...