சவூதி அரேபியா தலைமையில் உக்ரேன்-ரஷ்ய போருக்கான அமைதி பேச்சுவார்த்தை!

Date:

காலித் ரிஸ்வான்

ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் உக்ரேன்- ரஷ்ய போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள், இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனுக்கு நன்மை பயக்க கூடியதாகவும் மேலும் அமைதியான ஒரு நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச ஆதரவை பெற்றுத்தரும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இருப்பினும் ஜூன் மாதம் கோபன்ஹேகனில் நடந்த ஒப்பீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்கபர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சல்லிவன் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தத்தமது பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...