சவூதி அரேபியாவில் ஹிஜ்ரி 1445 புத்தாண்டு உதயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை முஹர்ரம் முதல் நாள் எனவும் ஜூலை 27ம் நாள் வியாழக்கிழமை முஹர்ரம் 10 ஆசூரா தினம் எனவும் அறிவித்துள்ளன.
முஹர்ரம் மாதம் உதயமாகுவதன் மூலம் முஸ்லிம்களின் புதுவருடம் ஆரம்பமாகிறது.
இம்மாதத்தின் ஒன்பதாம் பத்தாம் தினங்கள் தாஸூஆ, ஆசூரா தினங்கள் என அழைக்கப்படுவதோடு இத்தினங்களில் நோன்பு நோற்பது முக்கிய நற்காரியமாக அனுஷ்டிக்கப்படுகிறது.