சவூதியால் அன்பளிப்புச் செய்த சுனாமி வீட்டுத்திட்டம்: இதுவரை கையளிக்கப்படவில்லை

Date:

சவூதி அன்பளிப்பு செய்த நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்ட விடயத்தில் அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காது தொடர்ந்து பராமுகமாக செயற்படுகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆத்தோடு சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறைக்காக அபகரிக்கப்பட்ட மஹர பள்ளிவாசலை புதிய இடத்தில் அமைப்பதங்கு மாற்று காணி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த வரம் இடம்பெற்ற பாராளுமன் அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் நீண்ட காலமாக பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஊடாக அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை இன்று வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.

பயனாளிகளின் பாவனைக்கு இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்படாமையினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறியுள்ளது எனவும்அவர் கட்டிக்காட்டினார்.

அத்தோடு, மஹர பள்ளிவாசலை அமைக்க மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் சபையில் இம்ரான் எம்.பி வேண்டுகோள் விடுத்தார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...