கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மாத இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறையும். குறிப்பாக 7% ஆக குறைய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கடுமையான பணவீக்க அதிகரிப்பு கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்துவரும் பின்புலத்தில் நாட்டில் பொருளாதார நிலைமைகளும் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்துவருகிறது.
மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து எடுத்த பல முக்கிய தீர்மானங்களால் இதனை சாத்தியப்படுத்த முடிந்துள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்தின் ஊடாக மத்திய வங்கியால் இனி சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க முடியும்.
இதன் ஊடாக பொருளாதாரம் மீள்வது துரிதமாகும். அடைந்துக்கொள்ள வேண்டிய பொருளாதார இலக்குகளுக்கு இந்தச் சட்டமூலம் பயனுடையதாக இருக்கும்.
நாம் இன்னமும் பொருளாதார ரீதியாக ஸ்திரமடைய வேண்டியுள்ளது. அதேபோன்று கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.