யாழ்ப்பாணத்தில் காணிகளை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிஸ்கட் கொடுத்த கடற்படையினர்!

Date:

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, இந்த போராட்டத்தின் முடிவில் கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பின்னர் நீங்கள் தரும் பிஸ்கட்டை சாப்பிடுவோம்” என காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடற்படையினர் வழங்கிய பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களையும் பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்திருந்தனர்.

வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினர் உத்தியோகபூர்வமாக முன்னர் அறிவித்திருந்தனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளையே இவ்வாறு சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில்  ஒன்று கூடிய போராட்டகாரர்கள் வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக பொலிஸார், புலனாய்வாளர்கள் மற்றும் கடற்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...