வழிகாட்டல்கள் சரியாக அமைந்தால் திரிபோஷாவை தொடர்ந்து வழங்க முடியும்!

Date:

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைக்கப்பட்டால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதை வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ வழிகாட்டுதல்கள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சுகாதார அமைச்சுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இதில், சரியான பதில்களோ தீர்வுகளோ கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அதற்கான தீர்வும் வழங்கப்படவில்லை என தலைவர் கூறுகிறார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும் என குலரத்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனமும் தனியார் துறை நிறுவனமும் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளம் மற்றும் சோயாபீன்களை உலக உணவு ஸ்தாபனம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...