அண்மையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் விழித்திரை சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரேதப் பரிசோதனையில், மயக்க மருந்துக்காக செலுத்தப்பட்ட மருந்துதான் மரணத்துக்குக் காரணம் என்பது நிரூபணமாகியுள்ளதாகவும், எவ்வாறாயினும், பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து மேலதிக பரிசோதனைக்காக தேசிய தர ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.