வௌிநாட்டு தொழில் சந்தையில் அதிகரிக்கும் இலங்கையர்கள்!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் குழு பணியகத்தில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு சென்றிருந்ததாகவும்,  முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரிகத்து இருப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ருமேனியாவுக்கும், ஜப்பானுக்கும் அதிகப்படியான வௌிநாட்டு தொழிலாளர்கள் செல்கின்றனர்.

மொத்தத்தில் இலங்கையர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும்,  திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்ப எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...