ஹிஜர் 1445 புனித முஹர்ரம் யாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 18.07.22 (புனித துல் ஹிஜ்ஜஹ்; 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் எம்.பி.எம். அல் பத்தாஹி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் பாரிஸ் பஹ்மி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தோடு பிறை சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு 0112432110, 0112451245, 0777316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம்தொடர்பு கொள்ள முடியும்.