அபுதாபி மற்றும் இலங்கை இடையே குறைந்த கட்டண விமான சேவை!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் திட்டமிடப்பட்ட குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ‘Air Asia Abu Dhabi’ விமான சேவைக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ற்று வெளிநாட்டு விமானச் செயற்பாடுகள் சான்றிதழை வழங்கியது.

விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திறமையான விமானச் செயற்பாடுகளை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், விமான நிறுவனத்தின் பௌதீக வளங்கள், முறையான பயிற்சி, தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், விமானச் செயற்பாடுகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் உடல் திறன் ஆகியவை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விமான தரை செயற்பாட்டுப் பிரிவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இந்த விமான நிறுவனம் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து தனது விமான நடவடிக்கைகளை தொடங்க உள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...