அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

Date:

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

US Ambassador visit Jaffna library
முன்னதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வட மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் வட மாகாண அபிவிருத்திக்கு எவ்வகையில் ஆதரவு வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்தை பார்வையிட்ட பின்  அமெரிக்க நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் காலநிலை மாற்ற தழுவல் திட்டமான கார்பன் புளூபிரிண்ட் கடற்பாசி பயிரிச்செய்கை இடம்பெற்றுவரும் பிரதேசங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.

 

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...