அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்?

Date:

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே இந்த கதிரியக்க மற்றும் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR Scan இயந்திரங்களைத் திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் சானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...