2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன.
ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி நேற்று நாட்டை வந்தடைந்தது.
நேற்றைய தினம் 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியது.
13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.