இன்றைய வானிலை அறிவிப்பு

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...