இலங்கையில் நரிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி: உணவு கிடைக்காததே காரணம்!

Date:

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் நரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

வசிப்பிட இழப்பு, உணவு கிடைக்காதது, நாட்டின் வீதி வலையமைப்பு விரிவாக்கம் ஆகியனவே நாட்டில் நரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

ஏனைய பாலூட்டிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள நரிகள் சிறப்பு வாய்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“ இலங்கை நரிகள் மற்ற பாலூட்டிகளைப் போல் இல்லை, அது ஒரு பறவையைப் போன்ற தன்மை கொண்டது.

இலங்கையில் இவ்வாறான நடத்தைகளை கொண்ட  மற்றுமொரு பாலூட்டி கருங்குரங்கு மட்டுமே என இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வை அதிகாரியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் நிபுணர் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விலங்கின் 13 கிளையினங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன . இதன்படி யால, உடவலவ, வில்பத்து, குமண, வஸ்கமுவ போன்ற தேசிய பூங்காக்களில் அதிகளவான குள்ளநரிகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...