ஈரானிய பிரஜைகள் மூவருக்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு!

Date:

சிங்கராஜா வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில்  சிங்கராஜா வனப்பகுதியில்  தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...