கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Date:

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மொத்தமாக 11,900 விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 6,000 இற்கும் குறைந்த விரிவுரையாளர்களே இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 6,300 ஆகக் குறைவடைந்ததாகவும் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அரச பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமன்றி நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் 50 வீத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், 2022ஆம் ஆண்டு புதிய மாணவர்களை இணைத்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...