குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு: தந்தை கண்முன்னே பலியான பரிதாபம்!

Date:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (வயது26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களில் நிஷிதா, ரமீஷா ஆகிய இருவருக்கும் திருமணமாகி கணவரின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக அவர்கள் இருவரும் பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அவர்களது சகோதரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை கிசிச்சை நடந்துள்ளது.

அவருக்கு அவர்களது தாய் அஸமா தான் சிறுநீரகம் தானம் கொடுத்துள்ளார். இதனால் சகோதரிகளின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சகோதரிகள் 3 பேரும், அவர்களது தந்தையுடன் பீமநாடு பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர்.

அப்போது சகோதரிகளில் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனை பார்த்த மற்ற சகோதரிகள் அவரை காப்பாற்ற அடுத்ததடுத்து குளத்துக்குள் இறங்கினர். அவர்களும் குளத்துக்குள் தவறி விழுந்து தத்தளித்தார்கள்.

சகோதரிகள் 3 பேரும் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கினர். இதனை கரையில் இருந்த அவர்களது தந்தை பார்த்து கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் குளத்தில் மூழ்கிய 3 சகோதரிகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சுயநினைவின்றி கிடந்த அவர்கள், அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வைத்தியசாலைக்கு செல்வதற்குள் 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். தந்தை கண் முன்னே 3 சகோதரிகளும் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...