சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வை இழந்த 18 பேரிடம் விசாரணை!

Date:

நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேர் சத்திரசிகிச்சையின் பின்னர் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இக்குழுவினர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடி விசாரணை அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே.ரட்ணாயக்க, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் மகேந்திர செனவிரத்ன உட்பட்ட குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட 18 பேருக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு அறிவித்திருந்த போதிலும் 16 பேர் மாத்திரமே கலந்து கொண்டனர்.

இதுதொடர்பில் விரிவாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் இதன்போது அவர்களுடைய குடும்ப விவரம், வருமானம் உட்பட அனைத்து விடயங்களும் கேட்டறியப்பட்டு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் வாசித்து தெளிவுபடுத்திய பின்னர் அவர்களிடம் கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...